யாழ்ப்பாணம் மரபுரிமை மையம் உதயம்.

0 0
Read Time:2 Minute, 26 Second

யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களான மந்திரி மனை, சங்கிலியன் அரண்மனை, யமுனா ஏரி போன்றவற்றைப் பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்யும் நோக்குடன், “யாழ்ப்பாண மரபுரிமை மையம்” என்னும் அமைப்பு இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு ஒரு அமைப்பினை நிறுவுவதற்கு, யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மேற்கொண்ட முயற்சியினால் பதினொரு அங்கத்தவர்களைக் கொண்ட இந்த அமைப்பு இன்று நிறுவப்பட்டுள்ளது .

மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவராக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உப தலைவர்களாக வைத்திய கலாநிதி பேராசிரியர் ரவிராஜ், நடராஜா சுகிதராஜ் ஆகியோரும் செயலாளராக மருத்துவ பீடப் பதிவாளர் ராஜேந்திரம் ரமேஸ், துணைச் செயலாளராக பாசுப்பிரமணியம் கபிலன், பொருளாளராக பேராசிரியர் செல்வரட்ணம் சந்திரசேகரம் இணைப்பாளராக சிவகாந்தன் தனுஜன் பதிப்பாசிரியராக வரதராஜன் பார்த்திபன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். மையத்தின் உறுப்பினர்களாக விஸ்வலிங்கம் மணிவண்ணன், விஸ்வபாலசிங்கம் மணிமாறன், பூவானசுந்தரம் ஆரூரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

பொதுமக்கள் பங்களிப்புடன், இவ் அமைப்பு வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும். எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாக்க மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment