ஆஸ்திரேலியாவில் பதினொரு வருடங்களாக தமிழர் ஒருவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை விடுதலை செய்யக்கோரியும் தமிழீழம் விடுதலை அடைய வேண்டும் எனவும் தமிழர்களுக்கு நீதி வேண்டும் எனக் கோரி ஆஸ்திரேலியாவின் பல பாகங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்து மேற்கொண்டு வருகிறார் Renuga Inpakumar றேணுகா இன்பகுமார் என்ற ஆஸ்திரேலியாவில் பிறந்த 16 வயது தமிழ் சிறுமி.
இந்த சிறுமியின் செயற்பாடுகளுக்கு ஆஸ்திரேலியர்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் ஆதரவு வழங்கி வருகின்றனர். இந்த சிறுமி தமிழ் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்ட பல தமிழர்களின் நீதிக்காக சிறு வயதில் இருந்து குரல்கொடுத்து வருகின்றார்.
இந்த சிறுமி கடந்த வருடம் சுவிஸ் நாட்டின் ஜெனிவா இடம்பெற்ற ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் பங்குபற்றி தமிழர்களுக்காக குரல்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


