இனப்படுகொலைக்கு நீதி கோரி சாத்வீகமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு. பலருக்கு தடையுத்தரவுகள் இன்று வழங்கப்படுகின்றன.

0 0
Read Time:5 Minute, 29 Second

மட்டக்களப்பு நகரில் 19.03.2021 அன்று காலை நடாத்தப்படவிருந்த இனப்படுகொலைக்கு நீதி கோரி சாத்வீகமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தடையுத்தரவு வழங்கி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவர்களுக்கு வாழைச்சேனை போலீசாரினால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடையுத்தரவு 18.03.2021 பிற்பகல் 5.45 மணியளவில் கையளிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை போலீஸ் பொறுப்பதிகாரி குழுவினர் வருகைதந்து அவருக்கு அதனைக் கையளித்தனர். அதற்கான புகைப்படங்களையும், காணொலிகளையும் எடுத்துக்கொண்டனர். அத்தோடு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் AR/233/2021 இலக்க வழக்கின் குற்றவியல் நடைமுறைப்படி சட்டக்கோவைப் பிரிவு 106 (1) இன் கீழான தடையுத்தரவாக இதனைப் பிறப்பித்திருக்கின்றார். அதாவது நாளை மட்டக்களப்பு நகரில் நடைபெற இருந்த சாத்வீகமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டம் தடைசெய்வதற்காக இவ்வேற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களோடு இன்னும் பலருக்கு இதில் பங்குபற்ற தடையுத்தரவு நீதவான் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் இந்தத் தடையுத்தரவை இன்று மட்டக்களப்பு தலைமை போலீஸ் பொறுப்பதிகாரி வீ.கோ.ப. கெட்டியாராய்ச்சி அவர்கள் பெற்றிருக்கின்றார். இதேபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புகள், அரசியல் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இந்தத் தடையுத்தரவுகள் இன்று வழங்கப்படுகின்றன. உண்மையில் நாளை நடைபெற இருந்த இந்த சாத்வீகமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டத்தை நிறுத்துமாறு கோரியுள்ளனர். இதிலே முக்கியமாக அவர்கள் குறிப்பிடுவது யாதெனில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதன் காரணமாக இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியாக அபகீர்த்தியையும், அவமானத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக இந் நிகழ்வாக இருக்கும் என்றும், கூடுதலான நபர்கள் ஒன்றுகூடுவதனால் கொரோணா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், அதேநேரத்தில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் உத்தேசித்து தாங்கள் தடையுத்தரவை கோருவதாக போலீசாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, குறித்த சாத்வீகமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தடையுத்தரவை மட்டக்களப்பு தலைமை போலீஸ் பொறுப்பதிகாரி, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் முலம் பெற்று வழங்கியுள்ளார். இவ்வுத்தரவு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவர்களின் வீட்டிற்கும் சென்று கையளிக்கப்பட்டுள்ளது.

இன்றில் (18/03/2021) ல் இருந்து 14 நாட்களுக்குள் பேரணிகள் நடாத்தவோ, ஆர்ப்பாட்டங்கள் நடாத்தவோ கூடாது என தமிழ் உணர்வாளர் அமைப்பு தலைவர் கணபதிப்பிள்ளை மோகன், மற்றும் அவரது மகன் டிலான் அவர்களுக்கு ஏறாவூர் நீதிவான் நீதிமன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 19/3/21 அன்று நிலத்தடி மண் அகழ்விற்கு எதிராக செங்கலடி பிரதேசத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

18/03/2021 இன்று இரவு 8.30 மணியளவில் எனக்கு மட்டக்களப்பு நீதி மாற்றத்தினால் வாழைச்சேனை பொலிசாரினால் தடையுத்தரவு வழங்கப்பட்டது அதில் காணாமல் போன உறவுகளாலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி அமைப்பினாலும் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் இனப்படுகொலைக்கு நீதி கோரி நாளை மட்டக்களப்பில் போராட்டம் ஆரம்பமாக உள்ளது அதில் எனது பங்களிப்பை வழங்க விடாமல் தடையுத்தரவு எனக்கு வழங்கப்பட்டுள்ளது மனவேதனையுடன் குணராசா குணசேகரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment