பிரித்தானியாவில் தொடரப்பட்ட அம்பிகையின் உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் (15.03.2021) முடிவுக்கு கொண்டு வரப்பட்ள்ளது.
பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவேன் என இன்றுடன் 17 நாட்கள் பசித்திருந்த அம்பிகை கோரிக்கைகளில் ஒன்று முழுமையாவும் இன்னொன்று அண்ணளவாகவும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாலும், பாராளுமன்ற உறுப்பினர்களாலும் அனைத்து தமிழ் மக்களாலும் கேட்கப்பட்டுள்ளார்.
அம்பிகை முன்வைத்த அனைத்துலக சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குதல்(IIIM), அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) விசாரித்தல், சிறிலங்காவுக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல் மற்றும் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் கருத்து கணிப்பு வாக்கெடுப்புக்கான ஐ.நா வின் பரிந்துரைத்தல் ஆகிய நான்கு அம்சக்கோரிக்கைகளில் பிரித்தானியாவின் ஐ.நா.வுக்கான இறுதி வரைபில் ஒரு புதிய விதமான அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்று (IIM இன் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய) உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிரந்த ஐநா கண்காணிப்பளருக்கு பதிலாக, தொடர்ச்சியாண கண்காணிப்பு நடைமுறை ஓன்றும் உருவாக்கப்படவுள்ளது.
அறிக்கை வெளியீடு