அம்மையார் அம்பிகை அவர்களால் பிரித்தானியாவில் தொடரப்பட்டு வரும் சாகும் வரையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அவரால் சர்வதேசத்தை நோக்கி முன் வைக்கப்பட்ட நான்கு அம்சக்கோரிக்கைகளைவலியுறுத்தியும் இன்று அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு ஶ்ரீ திரோபதை அம்மன் ஆலய வளாகத்தில் 10ஆம் நாளாக சுழட்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது.
கடந்த சில நாட்களாக இந்தப்போராட்டம் பெரும் மக்கள் ஆதரவினை பெற்றுவருகின்றது.இந்தப் போராட்டத்திற்கு குறிப்பாக இந்துமத குருமார்கள்,பூசகர்கள்,இஸ்லாமிய மதகுருமார்கள்,போன்றவர்களோடு இளைஞர் ,யுவதிகளும் தன் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர்.இன்றைய 10ஆம் நாள் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாரை மாவாட்ட சங்கத்தலைவி செல்வராணி அவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்,தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ் ,அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துசாநந்தன்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் அழகக்கோன் விஜயரட்ணம், நாவிதன் வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்சினி ஆகியோரும் P2p சிவில் அமைப்புக்களின் மாவட்ட இணைப்பாளர் பிரதீபன் அவர்களும் வழமைபோல் கலந்து கொண்டனர்.










