Read Time:1 Minute, 1 Second
இன்றைய தினம் 13 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நேரத்தில் நல்லை ஆதீனத்தில் சந்திப்பினை மேற்கொள்வதற்காக வந்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாட்டிலே அவர்கள் போராட்டத்தை கடந்து சென்றபோது
மாணவர்கள் அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூகத்தினர் இணைந்து சர்வதேச விசாரணை வேண்டும் சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி போராடினார்கள் போராட்டத்தை கடந்து செல்லும்போது உயர்ஸ்தானிகர் மெதுவாக நகர்ந்து போராட்டத்தை அவதானித்த வண்ணம் சென்றார்.






