அறப்போராளி அம்பிகை அவர்களின் சாகும்வரையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் லண்டன் கிங்ஸ்பெரி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் தொடரப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.
அவர் முன்னெடுத்துள்ள அறவழிப்போராட்டத்திற்கு உலகெங்கும் இருந்து ஆதரவுகள் வருப்பெற்று வருகின்றது.
பிரித்தானியாவில் பெருந்திரளான மக்கள் அவரது இல்லத்திற்கு நேரில் வந்து தமது ஆதரவுகளை வெளிப்படுத்திச் செல்கின்றனர்.
கண்ணீர்மல்க மக்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகள் தேசியத்தின் மீதான தமிழர் விடுதலைமீதான பற்றுறுதியை பறைசாற்றி நிற்கின்றதை கண்முன்னே உணரக்கூடியதாக உள்ளது.
இதேவேளை நேற்றையநாள் அவரது இல்லத்திற்கு வருகைதந்த பிரித்தானிய காவல்த்துறையினர் அறப்போராளி அம்பிகை அவர்களை பார்வையிட்டதுடன் உண்ணாவிரதம் தொடர்பான விளக்கங்களை கேட்டுப்பெற்றதுடன் தமது ஒத்துழைப்புகளை வழங்கவும் தயாரெனக் கூறியிருந்தனர்.
காவல்துறையினரின் ஒத்துழைப்பானது தற்போதைய கொரொனா கொவிட்-19 சட்ட விதிமுறைகளின் மீதிருந்த மிகைப்படுத்தப்பட்ட அச்சவுணர்வையும் அகற்றியுள்ளது.
தொடரும் நாட்களில் வரப்போகின் மக்கள் எழுச்சியானது பிரித்தானிய அரசை நிச்சயம் இவ் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பான கவனத்தையும் அதற்கான பதிலையும் வழங்குமென எதிர்பார்க்கலாம்.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் மலரட்டும்.
https://www.tagesanzeiger.ch/wenn-die-wunden-nicht-heilen-157650161843



