நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்ற முன்றலில் ஆரம்பித்து ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று 18.02.2021 சுவிஸ் பாசல் மாநிலத்தை வந்தடைந்துள்ளது.
தொடர்ச்சியாக பாசெல் மாநிலத்திலிருந்து சுவிசின் பிரதான நகரங்களுக்கு ஊடாக பயணித்து 22.02.2021 ஐ.நா முன்றலினை வந்தடைந்து. தொடர் அடையாள உண்ணா நோன்பும் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெற இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

தாயகத்தில் தமிழ்மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை வெளிக்கொணரும் முகமாக அடையாள உணவுதவிர்ப்புப் போராட்டம்!
22.02.2021 மற்றும் 24.02.2021
காலை 10:00 – 17:00 மணி வரை
சிறிலங்கா மீதான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை கொண்டுவரவுள்ள தீர்மானம் விவாதிக்கப்படும் நாளன்று ஐ.நா சபை முன்றலில்..
கவனயீர்ப்புப் போராட்டம்.
24.02.2021: புதன் 14:30 – 16:30 மணி வரை
காவற்துறையின் அனுமதியுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இக் கவனயீர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டு உரிமைக்குரல் கொடுக்க அனைவரையும் அழைக்கின்றோம்.
மேலும் 01.03.2021 அன்று ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் பெரும் கவனயீர்ப்பு போராட்டமும் மக்கள் எழுச்சியுடன் கொடிய நோய்த்தொற்றின் பாதுகாப்பு முன் எச்சரிக்கைகளோடு நடைபெற இருக்கின்றது.
