Read Time:1 Minute, 11 Second
தாளங்குடாவில் சமய ஆராதனைகளுடன் காலை 9 மணிக்கு ஆரம்பித்து பேரணியானது திருகோணமலை வீதி ஊடாக ஆரையம்பதி காத்தான்குடி ஊடாக மட்டக்களப்பு கல்லடி பாலத்தை அடைந்து கல்லடியில் இருந்து மாபெரும் எழுச்சி பேரணியாக மட்டக்களப்பு நகரை வலம் வந்து
ஏறாவூர் நோக்கி தற்போது புறப்படுகிறது. தொடர்ந்து வாழைச்சேனை வழியாக அங்கிருந்து நாவலடி சந்தி சென்று அங்கிருந்து வாகரை நோக்கி புறப்பட்டு வெருகல் வழியாக திருகோணமலை மூதூர் சந்தியை சென்றடைந்து அங்கிருந்து திருகோணமலை நகரை அடையும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தென்னமரவடியை அடைந்து அங்கிருந்து முல்லைத்தீவை இன்று மாலை அளவில் சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் ஆன வடகிழக்கு சிவில் சமூக அமைப்பினர் அறியத்தந்துள்ளார்கள்.