*பிரான்சு,தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தாயக வரலாற்றுத் திறனறிதல்*, எதிர்வரும் *21 ,22 ஆம் நாட்களில்* காலை *9.00 மணி முதல்* மாலை *6.00 மணி வரை* *இணையவழியில் நடைபெறவுள்ளது*.
மேலும்Month: November 2020
பிரான்சில் இடம்பெற்ற வீரமறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!
இந்திய- சிறீலங்கா கூட்டுச்சதியால் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும், 2 ஆம் லெப். மாலதி அவர்களதும் 33 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், கேணல் பரிதி அவர்களது 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனையில் இன்று 08.11.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பேரிடர் தொடர்பான பிரான்சு அரசின் நடை முறைகளுக்கு அமைய இடம்பெற்றது,
மேலும்சுவிசில் பத்தாயிரத்தை தொட்ட மகுடநுண்ணுயிரித்தொற்று
04. 11. 2020 இன்று 14.30 மணிக்கு சுவிற்சர்லாந்தின் நடுவனரசின் அமைச்சர்கள் திருமதி வியோலா அம்கெர்ட் (பாதுகாப்பு அமைச்சர்), திரு. அலான் பெர்சே (சுகாதார அமைச்சர்) மற்றும் திரு. ஊவெலி மௌறெர் (நிதி அமைச்சர்) ஆகியோர்தற்போதைய சுவிற்சர்லாந்தின் நிலைமை தொடர்பில் தகவல் அளித்தனர். மேலும் நோய்த்தடுப்பு நடவடிக்கை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள கடினங்களை எதிர்கொள்ள அரசு அளிக்க உள்ளஉதவிகள் தொடர்பிலும் விளக்கினர்.
மேலும்கேணல் பரிதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 08-11-2020
கேணல் பரிதி களத்திலும்,புலத்திலும்எமது விடுதலைக்காக அயராது போராடியவர். சிங்கள அரசின் உளவுப்பிரிவால் 08.11.2012 அன்று பாரிசு மண்ணில் சுட்டுக்கொல்லப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
மேலும்பிரிகேடியார் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் !
தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச் செல்வன் உட்பட ஆறு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 02-11-2020 அன்று தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு பணிமனையில் சுகதார நடைமுறைகளுக்கு ஏற்ப இடம் பெற்றது.
மேலும்