Read Time:1 Minute, 14 Second

நுவரெலியா – ஹட்டன் பொலிஸ் பிரிவு, டிக்கோயா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன்போது எபோட்சிலி தோட்டத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அம்பிகாமலர் (48-வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
டிக்கோயா தோட்ட தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருக்கையில் இன்று (25) காலை 10 மணியளவில் மரமொன்றிலிருந்த குளவிக் கூட்டை கழுகு கொத்தியதில் குளவி கூடு கலைந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்கள் மீது குளவிகள் கொட்டியுள்ளன.
குளவி கொட்டுக்கு இலக்காகிய ஆறு பெண்களும் இரண்டு ஆண்களுமாக எட்டுபேர் காயமுற்றுள்ளனர். இவர்களில் ஒருவரான குறித்த தாய் மரணமாகியுள்ளார்.