அண்ணனே தமிழினத்தின் அருமறை-அவர்
எண்ணத்தின் உறுதியே விடுதலை
அகரமும் அஃதெலாமாக
அண்ணனே எமது உயிர்மொழி
அகத்திடைத்தெளிவுகொள்ள
அகலான தூய சுடரொளி
ஆயிரம் தடைகள் வரினும்
அவர் சுவடு காட்டும்வழி
ஆதாரம் என்பது எமக்கு
அண்ணன்தன் சிந்தனைத்துளி
இவ்வுலகில் இணையில்லாத
இசைகொண்ட பேரொலி
ஈதலே இன்பமென்ற
ஈரநெஞ்சோன் கதிரொளி
உறுதியில் வான் கடந்த
உயரத்தின் பெருவெளி
ஊதியே பகைவிரட்டும்
உண்மை வீரப்பறையொலி
எதற்கும் அஞ்சாததமிழ்
எழுச்சியின் பெருந்தகையொளி
ஏழிசையும் மெட்டுத்தரும்
எம்தலைவர் புகழ்பாட
ஐம்பூதம் பாவெழுதும்
அன்னைத்தமிழ்த் தேனூற
ஒப்பாரில்லா வேந்தே அண்ணன்
உறுதிகனற் பெருமலையே
ஓங்கிச் செழிக்கத் தமிழ்
ஓதிடும் நாளெல்லாம்அவர் பெயரே
ஔடதமே தாய்மடியின்
இடர்களையும் திரள்வீரா
அகவை அறுபத்தாறில்இன்று
அன்புநிறை வாழ்த்துரைப்போம்
அறிவைத் திறனைப் பண்புகளை
ஆற்றலை ஆளுமையை அறநெறியை
வல்லமையை வழிமுறையை ஞானத்தைத்
தந்தெமை வளர்த்தாரே தாயாக
அண்ணனே தமிழினத்தின் அருமறை-அவர்
எண்ணத்தின் உறுதியே விடுதலை
கலைமகள்
26.11.2020