பிரான்சில் சிறப்பாக இடம்பெற்று முடிந்த இசைவேள்வி 2024 போட்டிகள்!

0 0
Read Time:4 Minute, 2 Second

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் 10 ஆவது ஆண்டாக நடாத்திய இசைவேள்வி 2024 கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள்

கடந்த 15.06.2024 சனிக்கிழமை, 22.06.2024 சனிக்கிழமை இடம்பெற்ற அதேவேளை கடந்த (23.06.2024) ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக பொண்டிப் பகுதியில் மிகச் சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது.

மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை 02.04.2009 அன்று ஆனந்தபுரம் பெட்டிச் சமரில் வீரச்சாவடைந்த மேஜர் பாரதி (குமரகுரு சிவகரன்) அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மவர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றன.

போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிப்புச்செய்யப்பட்டனர்.

போட்டியில் மிகச் சிறந்த போட்டியாளர் தெரிவுசெய்யப்பட்டு ‘இசைத்துளிர்” கிண்ணம் வழங்கப்பட்டது.

2024 இசைவேள்வியின் ‘இசைத்துளிர்” ஆக சாகித்தியாலயம் இசைப்பள்ளி மாணவன் செல்வன் சுரேஷ்குமார் சாகித்தியன் அமுதன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

நிகழ்வில் சிறப்புரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.

மூன்று தினங்களும் தமிழர் கலைபண்பாட்டுக்கழக உறுப்பினர் திரு. செல்வா அவர்கள் இசைவேள்வி நிகழ்வை தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை‌ நடுவர்களாக திருவாட்டி கிருஷ்ணசாமி லதா யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி, யாழ்.பல்கலைக் கழகம். இசைக் கலைமணி, யாழ். நெல்லியடி மத்திய கல்லூரி சங்கீத ஆசிரியை அவர்கள் திருவாட்டி – அன்ரன் இம்மனுவெல் சங்கீத வித்வான் நொயலா(Noela) இசைக்கலை மணி, தமிழ் நாடு அரசு இசைக்கல்லூரி சென்னை. இசை ஆசிரியை – வாய்ப்பாட்டு – வீணை அவர்கள், திரு. மகேஸ்வரன் வயலின் வித்துவான் – சங்கீத கலாஜோதி, சங்கீத கலாவித்தகர் (அடையாறு) இசைக் கல்லுரி அவர்கள்,தமிழீழ தேத்தில் முதன் முதலில் மிருதங்க அரங்கேற்றம். கண்ட போராளிக் கலைஞர், கலாவித்தகர். திரு. நிதர்சன் அவர்கள்ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இசைவேள்வி 2024 போட்டி முடிவுகள்:

வயலின்

1ம் இடம் : மயூரன் காருண்யா

தண்ணுமை ( மிருதங்கம் )

1ம் இடம் : விதுஷ் விஜயகாந்தன்

2ம் இடம் : மயில்வாகனம் ஆதிகேஷன்

3ம் இடம் : ஹரி லக்ஸ்மன்

குரலிசை –

1ம் இடம் : திலிப்குமார் திசானிகா

2ம் இடம் : தெய்வேந்திரம் ஹரிஹரணி

3ம் இடம் : கோகுலதாஸ் சூர்ஜா

வயலின் –சிறப்பு விருது

அசிதன் தேவன்

தண்ணுமை சிறப்பு விருது

கணேசலிங்கம் துவாரகன்

இசைத்துளிர் 2024

சுரேஷ்குமார் சாகித்தியன்

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-ஊடகப்பிரிவு)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment