பிரான்சு செவ்ரோன் நகரில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவு

0 0
Read Time:1 Minute, 48 Second

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் மே 18 பிரான்சில் நேற்று சனிக்கிழமை காலை 10.00மணிக்கு செவ்ரோன் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுக்கல்லின் முன்பாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் செவ்ரோன் பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

பொதுச்சுடரைத் தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் உயிர்கொடுத்தவர்களின் உறவுகள் உள்ளிட்ட அனைவரும் நினைவுச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

நிகழ்வில் மாநகரமுதல்வர்,துணைமுதல்வர்கள், மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு நினைவேந்தி உரை ஆற்றியிருந்தனர்.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் நினைவுரையை ஆற்றியிருநாதார். அவர் தனது உரையில், இன்று தமிழின அழிப்பின் 15 ஆவது ஆண்டில் பயணிக்கின்றோம். தொடர்ச்சியாகப் போராடுவதன் மூலமே எமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment