செங்காளன் மயானத்தில் தமிழர்களுக்கு அனுமதி மீளவும் வழங்கப்பட்டது

0 0
Read Time:4 Minute, 18 Second

பசுமைக்கட்சியின் மாநில பாராளுமன்ற உறுப்பினர் துரைராஜா ஜெயக்குமாரின்
தலையீட்டால் அனுமதி பெறப்பட்டது.2019இல் இருந்து இந்த அனுமதி மறுக்கப்பட்டதால்
இறுதிக்கிரியை நேரங்களில் பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்தனர்.

தற்போது அந்த மாநில மக்களின் ஆதரவோடு பேச வேண்டிய இடங்களில் பேசி மனு
கொடுக்க வேண்டிய இடங்களில் கொடுத்துத் மக்கள் பிரதிநிதியாக தமிழ் மக்களின் இந்த
பிரச்சினையை சுமூகமாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் அதற்குரிய அனுமதியை
பெற்றுக்கொடுத்துள்ளார்.
அனுமதி மறுப்பென்பது இதுதான் செங்காளன் மாநிலத்தில் freidhof feldi என்கிற மயானத்தில் இறுதிக்கிரியைகளைஆற்றுவதற்கு இரண்டு மண்டபங்கள் உள்ளன. அதில் சிறியதான மண்டபம்
70 பேருக்குரிய இருக்கைகளை கொண்டதாகும் அந்த மண்டபம் தனியே தமிழர்களுக்கானதென்று
ஒதுக்கப்பட்டட் தாகவும் அதில் எமது சமய சடங்குகளை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது .
பெரிய மண்டபம் எக்காரணம் கொண்டும் தமிழர்களுக்காக திறந்து விடப்படமாட்டாது
என்கிற இறுக்கமான நடைமுறையோடு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழர்களது இறுதிக்கிரியைகளில் நூற்றுக்கதிகமான உறவுகள் கலந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் மழை, வெயில்

குளிர் காலங்களில் வெளியில் நின்று மக்கள் பல்வேறு அசெளரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இதனை நிவர்த்தி செய்ய ஜெயக்குமார் அவர்கள் மாநில பொதுமக்களின் கை யெழுத்து
வேட்டையுடனும் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதிக்கிரியையொன்றில்
ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கலந்து கொண்டு அவர்கள் இருக்கைகள் இன்றி
வெளியிலே நின்று சிரமங்களை எதிர்கொண்டதை வெளிக்கொண்டுவர பத்திரிகை
செய்தியாளரை அழைத்து நிலைமைய விளக்கினார். விழித்துக் கொண்டது மயான நிர்வாகம்.
சுமூகமான பேச்சுக்கழைத்தது ஜெயக்குமாரை.
இதுவொரு இன- நிற வேறுபாடாக பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்துத் தமிழர்கள் இறுதிக்கிரியைகளையாற்றுவதற்கு இனிமேல் பெரிய மண்டபம் திறந்து விடப்படும் என்கிற அனுமதி வழங்கல் தொடர்பான அறிவித்தலை அறிவித்துள்ளது. இறுதிக்கிரியைகள் சிறிய மண்டபத்தில் சமய சம்பிராதாய சடங்குகளுடன் நடைபெறும் போது மேலதிகமான உறவுகள் பெரிய மண்டபத்தில் திரையிலே பார்ப்பதற்கான வசதிகளை செய்து தரப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இத்தகை ய நடவடிக்கையை எடுப்பதற்கு தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி நிலைமையை சுமூகமாக கொண்டுவந்துள்ள ஜெயக்குமார்
அவர்கட்கு மாநில மக்கள் தமது நன்றியை தெரிவித்துத்ள்ளனர். அந்த சம்பவம் சொல்லும் செய்தி
எமக்காக குரல் கொடுக்கும் அரசியல் பிரதிநிதிகள் மாநிலம் தோறும் இருந்தால்
எதையும் லாபகமாக பேசி தீர்வு காணலாம் என்பதாகும். எது எவ்வாறோ செங்காளன் மயானத்தில்
கடந்த நான்கு வருடமாக மூடப்பட்ட கதவு திறக்கப்பட்டது .

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment