அண்ணனின்மகளே அழகுத்தளிரே

1 0
Read Time:1 Minute, 10 Second

அண்ணனின் மகளே
நீ எங்கே÷எங்கள்
அன்பின் சுடரே நீ எங்கே
அகவை முப்பத்து நான்காச்சு உனக்கு .
ஆறாத வலியோடு
அங்கலாய்த்து உனைத்தேடுது மனது
துவாரகா!

துள்ளித்திரிந்த எங்கள்
எங்கள் அண்ணனின்
பிள்ளையே
துடிப்பு மிகுந்த அண்ணியின் செல்லமே
நடனமாடிய உன்
பாதங்கள் எங்கேயம்மா
தற்காப்புக்கலையின்
நிமிர்வு எங்கேயம்மா
தப்பின்றி நீ பேசும்
தமிழ் கேட்க மாட்டேனா-புன்னகை
பொலிந்த உன் பூமுகம்
பார்க்க மாட்டேனா-உன்
அழகான புன்னகையை
நயந்திடவே முடியாதா?
எங்கள் தலைவனின்
தவப்பேறே
எங்குதான்நான்தேட?
எங்கள் குல முத்தே
ஏங்கித்தவிக்கும் நிமிடங்கள்-எதிரிகளை
எரித்திடவே தோன்றுதம்மா
வீரவேந்தனின் வாரிசே-எம்
விழிகள் உன் வரவுக்காய்க் காத்திருக்கின்றன..
கலைமகள்.

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment