இந்தியாவின் போக்கு சீனாவுக்கு எதிராகவும் ரஷ்யாவுடன் நட்பாகவும் – ஊடகங்களின் பார்வையில்

0 0
Read Time:5 Minute, 48 Second

Hindustan Times தொடக்கம் தமிழ்நாட்டில் இருக்கும் ‘தமிழ்ப்பொக்கிஷம்’ வலையொளி வரை, தற்போது நடைபெறும் போரில், ரஷ்யாவிற்கு ஆதரவாகவும் டொலருக்கு எதிராகவும் தமது கருத்துகளை முன்வைத்தாலும், சீனாவைச் சீண்டுவதை மட்டும் நிறுத்தவில்லை.

சீனாவை தமது நிரந்தர எதிரியாக தாமே உருவாக்கிக் கொண்ட கற்பிதத்தை இவர்கள் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.18 நாடுகள், Special Rupee Vostro கணக்கைத் திறந்து இந்திய ரூபாயில் வணிகம் செய்யத் தயாராகிவிட்டதால், சீனாவை மிஞ்சிவிட்டது இந்தியா என்று சம்பந்தமில்லாமல் உளறத் தொடங்கிவிட்டனர்.
வருடத்திற்கு $130 பில்லியனில் நடக்கும் சீன- இந்திய வர்த்தகம் எந்த நாணயத்தில் settlement ஆகுமென்பதை இவர்கள் சொல்வார்களா?.
சீனாவின் Digital நாணயம், அதன் பெருவர்த்தகத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து இவர்கள் ஆராய வேண்டும்.
Sanctions என்பது அடிப்படையில் நிதி முடக்கமாகும். இதனை எதிர்காலத்தில் தாமும் எதிர்கொள்ளலாம் என்கிற அச்சமே , சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்யும் நிலையை உருவாக்கியுள்ளது.இது ஒருவகையில் அமெரிக்க டொலர் மீதான நாணயப்போர் என்று கருதலாம்.
சீனா, சவுதி போன்ற நாடுகள் தாம் டொலரில் வாங்கிக் குவித்த அமெரிக்க திறைசேரி முறிகளை வேகமான விற்கத் தொடங்கியுள்ளன. இது நாணயப் போரின் இன்னுமொரு வடிவம்.
தற்போது அமெரிக்காவின் மொத்தக் கடன் $31 ரில்லியன். பல நாடுகள் தாம் வாங்கி வைத்த முறிகளை unload செய்வதால், வருகிற செப்டம்பருக்குள் , அமெரிக்காவின் மொத்தக் கடன் இன்னும் அதிகரிக்கும்.
வங்கிகள் முடங்குவதை தற்காலிகமாகத் தடுக்கலாம். ஆனால் அதனைக் காபாந்து பண்ணப்போனால் அமெரிக்காவின் மொத்தக்கடன் விரைவில் $40T ஐ எட்டும்.
விடயத்திற்கு வருவோம். அமெரிக்காவானது சீனாவை சுற்றிவளைக்க, இந்தியாவை அணி சேர்க்கலாம். அதுதான் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
BRICS ,SCO, AIIB மற்றும் NDB இல் இருந்து இந்தியாவை வெளியே எடுப்பது கடினம் என்று அமெரிக்காவிற்குத் தெரியும்.ஆதலால் QUAD போன்ற புதிய கூட்டுக்குள் இந்தியாவை இணைப்பார்கள். RCEP என்கிற பொருண்மிய வர்த்தகக் கூட்டிற்குள் இந்தியா நுழையாமல் தடுப்பார்கள்.ஆனால் AUKUS இற்குள் இணைத்து, தமது அணுசக்தி நீர்மூழ்கியின் தொழில்நுட்பத்தை மட்டும் இந்தியாவோடு பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.
ரஷ்யாவின் S400 ஏவுகணைகளை துருக்கி வாங்கினால் கோபப்படும் அமெரிக்கா, இந்தியா பெற்றுக் கொண்டால் மெளனம் காக்கிறது. ஆனால் இந்த அமைதியும் பொறுமையும் பல நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பில்லை.
தனது நாடும், தனது ஆதரவு அணி நாடுகளும் பலவீனமடைவதை அமெரிக்கா உணர்கிறது. ஆசியான் மாநாட்டில் தவறாமல் கலந்து கொள்கிறது. உறவுச்சிதைவுகளை சரி செய்ய, அந்தோனி பிலிங்கனும் மோடி போல் ஓடித்திரிகிறார்.EAM ஜெயசங்கரோடும் ஊடக வெளியில் மோதிக் கொள்கிறார்.
அதேவேளை ரஷ்யாவும் சீனாவும் தமது பொருண்மிய -நட்பார்ந்த அணிகளைத் திரட்டும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.சவுதிக்கும் ஈரானிற்குமிடையில் பல மாதங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன என்று இந்திய ஆய்வாளர்கள் கூறினாலும், இதன் பின்னணியில் சீனாவின் வகிபாகம் பெரியளவில் இருந்திருப்பதை அண்மையில் நடைபெற்ற சவுதி-சீன-ஈரானிய வெளிநாட்டமைச்சர்களின் சந்திப்பும் ,பிரகடனமும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆகவே சீனக்கசப்பில் திளைத்திருக்கும் பல இந்திய ஊடகங்கள், சில எதார்த்தங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
“இந்தியாவானது சீனாவிற்கெதிரான அமெரிக்க -மேற்கு அணியில் இருக்க வேண்டும். அதேவேளை, ரஷ்ய அணியோடும் உறவினைப் பேண வேண்டும்” என விரும்பும் இந்திய தேசியவாத ஊடகத்தாரின் விருப்பிற்கேற்றவாறு, அனைத்துலக அரசியல் அரங்கில் ,அதற்கான சாதகமான சூழல் உருவாகும் வாய்பு அரிது என்று கூறலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment