ெஐயசிக்குறு எதிர்ச்சமரும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட பவல் கவசவாகனமும்.

0 0
Read Time:5 Minute, 24 Second

சனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் வன்னி பெருநிலப்பரப்பை கைப்பற்றி அதனூடாக யாழ்குடாநாட்டிலிலுள்ள சிங்களப்படைகளுக்கு தரைவழியாக வழங்கள்களை மேற்கொள்ள பல்வேறு நாடுகளின் துணையுடன் பல்வேறு கனவுகளுடன்  13.05.1997 அன்று  ெஐயசிக்குறு எனும்பேரில் ஒரு பாரிய  இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது சிங்களம்.

இப்படைநடவடிக்கைக்கு எதிராக வடுதலைப்புலிகளின் படையணிகள் மற்றும் துறைசார் தாக்குதலணிகள்  கட்டம் கட்டமாக களமுனைக்கு சென்றனர்.அந்தவகையில் கடற்புலிகளின் தரைத்தாக்குதற் படையணியான சூட்டிபடையணியும் ெஐயசிக்குறு எதிர்ச் சமருக்குச்சென்று மறிப்புச் சமரைத் தொடர்ந்தனர்.அந்தவகையில் சூட்டி படையணிக்கு மேலதிகமாக ஒரு தொகைப் புதிய போராளிகள்  கொடுக்கபபட்டனர் . அப்போராளிகளைப் பொறுப்பெடுக்க வந்த சூட்டி படையணித் தளபதி சிறப்புத்தபதி சூசை அவர்களிடம் மறிப்புச்சமரை தீவிரப்படுத்துவதற்காக எங்களுக்கு ஒரு ஐம்பது கலிபர் துப்பாக்கி ஒன்றைத் தருமாறு கேட்டார.அதற்க்கு சூசை அவர்களோ என்னட்டை ஏன் கேட்கிறாய் உங்களிடம் தானே இருக்கிறது போய் எடுங்கோ என்று தனக்கேயுரிய நகைச்சுவையுணரவுடன்  சொன்னார் . (உங்களிடம் தானே இருக்கிறதன் அர்த்தம் அதாவது முன்னேறி வரும் சிங்களப்படையிடம்  தாக்கி கைப்பற்றுங்கள் என்பதாகும்.) அதற்கமைவாக புதிய போராளிகளிடம் சிறப்புத்தளபதி கூறிய விடயத்தை சூட்டி படையணித் தளபதி கூறி நாங்கள் எப்படியாவது சிங்களப்படையிடம் ஐம்பதுகலிபர் ஆயுதத்தைக் கைப்பற்ற வேணடும் என  உறுதியாகவும் தெளிவாகவும் கூறி புதிய போரளிகளுக்கான விசேட பயிற்சிக்காக அனுப்பி வைத்தார்.பயிற்சிகள் நிறைவடைந்ததும் களமுனைக்கு சென்று மறிபப்புச்சமர்களில் ஈடுபட்டனர்.அந்தவகையில்  1998ம் ஆண்டு முற்பகுதியில் நைனாமடுச் சந்தியை வன்வளைப்பதற்காக சின்னப்பூவரசங்குளம் மற்றும் ஒதியாமடுப்பகுதிகளிலிலிருந்து மூர்க்கத்தனமான எறிகனைச் சூட்டாதரவுடன் காலை ஐந்து மணயளவில் முன்னேற்றத்தை ஆரம்பித்த சிங்களப்படையினர் மீது  நைனமடுச்சந்தியில் வழிறித்த கடற்புலிவீரர்கள்  மூர்க்கத்தனமான மறிப்புச்சமரில் ஈடுபட்டனர் . ஒருகட்டத்தில் சிங்களப்படை பவல் கவசவாகனத்துடன் வர அவ்வாகனம் மீது போராளியொருவர் ஆர்பிஐித் தாக்குதல் மேற்கொள்ள அத்தாக்குதல் பவல்மீது படவிவில்லை உடனடியாக  அப்பகுதித்தளபதி ஆர்பிஐி போராளிக்கருகில் சென்று கடுமையான உத்தரவு பிறப்பிக்க அடுத்த அடி பவல் மீது பட்டு எரிந்தது பவலில் வந்தபடையினர் கொல்லப்பட அவ் பவல்கவசவாகனத்தைக் கைப்பற்றிய கடற்புலிவீரர்கள் அவ்வாகனத்திலிருந்த ஐம்பது கலிபர் ஆயுதம் உட்பட மேலும் பல நவீனரக ஆயுதங்களையும் கைப்பற்றினர். இப் பாரிய  வன்வளைப்பு மாலை ஆறுமணிவரை தொடர்ந்தது. இருந்தாலும் அன்றைய தினம் தமிழர்களின் நிலம் வன்வளைக்கமுடியாமல் சிங்களப்படை பின்வாங்கியது.இச்சமரில் கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி மற்றும் ஏனைய அணிகளும் கடற்புலிவீரர்களுக்கு உதவியாக இருந்தனர். இச்சமரில் அணித் தலைவர்கள் மட்டுமே பலகளம் கண்ட போராளிகள் ஏனையவர்கள் புதியபோராளிகள் அதுவும் இப்பாரிய இராணுநடவடிக்கையை எதிர்ர்ப்பதென்பது கற்பனைக்கப்பாலானது.நூறு முயலுக்கு ஒரு சிங்கம் பொறுப்பாக இருப்பதுதான் எனக்கு பிடிக்கும் என்ற தேசியத் தலைவரின் சொல்லுக்கும் அணித்தலைவர்கள் செயல்வடிவம் கொடுத்தார்கள். அப்புதிய போராளிகள் பின்னாளில் எமது போராட்டத்திற்க்கு மிகவும் நெருக்கடியான நேரங்களிலும் சவாலான தருணங்களிலும் இலகுவாக அவைகளை வென்று எமது போராட்டத்திற்க்கு வலுச் சேர்த்தார்கள்.
எழுத்துருவாக்கம்…சு. குணா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment