உலக மக்களுடன் சேர்ந்து உலகத் தமிழ்மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இருந்த பேராயர் டெஸ்மாண்ட் டுட்டுவின் மறைவு மனித நேயத்தின் பெரும் இழப்பாக கருதுகிறோம்.

– தமிழீழ மக்கள் உலகளாவிய ரீதியில் இன நிறவெறிக்கெதிராகக் குரல் கொடுத்து வந்த மானுடநேயர் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு் அவர்கள் தனது 90 ஆவது அகவையில் காலமான செய்தி எம்மையெல்லாம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஆன்மீகவழியில் மானுட விடுதலைக்காகப் போராடிய மகத்தான மாமனிதர். தென் ஆப்ரிக்கா மக்கள் இன -நிற வெறி அடக்குமுறைக்குள் இருந்த காலத்தில் நெல்சன் மண்டேலா மற்றும் தென் ஆப்ரிக்கா விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட பலருடன் சேர்ந்து தனது மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர் டெஸ்மாண்ட் டுட்டு. அத்துடன் நின்று விடாமல், உலகில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் மனிதவுரிமைகளுக்காவும் அமைதியான வாழ்வுக்காகவும் தன் வாழ்வின் இறுதிக்கணங்கள் வரை குரல் கொடுத்துவந்தவர். ஈழவிடுதலை மீதும் பற்றாளராகவும் தமிழர்களுக்கான நீதிக்காகவும் சர்வதேச அரங்குகளில் குரல் கொடுத்துவந்த பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு அவர்களது இழப்பு தமிழீழ மக்களுக்கும்…

மேலும்