சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின்
நினைவெழுச்சி நாள்!

இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வீரச்சாவைத்; தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், 26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலின் போது வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாளானது 26.09.2021 ஞாயிறு அன்று பேர்ண்; மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடனும், சிறப்பாகவும் கடைப்பிடிக்கப்பட்டது.

மேலும்

பிரான்சு ஆர்ஜொந்தை நகரில் மழைக்கு மத்தியில் எழுச்சியடைந்த தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் நினைவேந்தல்!

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலும் இன்று (26.09.2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் மழைக்கு மத்தியில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

மேலும்