முதற் பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி உட்பட நான்கு மாவீரர்களின் 36ம் ஆண்டு நினைவு நாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்..14.10.2023 சுவிஸ்

தமிழீழ விடுதலைக்காய் தங்களை ஆகுதியாக்கிய எம்மாவீரச்செல்வங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்த வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முகமாக, உங்கள் இணையத்தளங்களில் பிரதான இடங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியபப்டுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும்

ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு – 10.09.2023

தமிழினத்தின் விடிவிற்காய் தீயினில் தம்மையே ஆகுதியாக்கிய அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவுகள் சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கும் முகமாக, உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப் புத்தகங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும்

தடா நா.சந்திரசேகர், தமிழீழத் தேசியத் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராக பல செயற்பாடுகளை முன்னெடுத்தார் என. சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலம் ஈழத் தமிழரின் விடுதலையில் தீவிர பற்றும் உறுதியான செயற்பாடுகளும் கொண்டிருந்த நா.சந்திரசேகர், தமிழீழத் தேசியத் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராக பல செயற்பாடுகளை முன்னெடுத்தார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல்!

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 17 ஆவது ஆண்டு நினைவுநாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு பஸ்ரில் பகுதியில் இன்று (14.08.2023) திங்கட்கிழமை பிற்பகல்15.00 மணிக்கு இடம்பெற்றது.

மேலும்

லெப் கேணல் விக்கீஸ்வரன் அவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.

10.08.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப் கேணல் விக்கீஸ்வரன் அவர்களின் வீரவணக்கநாள் இன்றாகும். ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன்.இவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். 1992, 1993 ஆம் ஆண்டுகளில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

மேலும்

பிரான்சில் 7 ஆவது தடவையாக இடம்பெறவுள்ள தியாகதீபம் அறிவாய்தல் அரங்கு!

பிரான்சில் 7 ஆவது தடவையாக இடம்பெறவுள்ள தியாகதீபம் அறிவாய்தல் அரங்கு!

மேலும்

தமிழீழத்தேசியத் தலைவரின் வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை பிரகடனம்,04.08.1987

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவது போல, எமது சக்திக்கு அப்பாற்பட்டது போல, இந்தத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.இதன் விளைவுகள் எமக்கு சாதகமாக அமையுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதிகளாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல், இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட ஒப்பந்தம் இப்பொழுது அவசரஅவசரமாக அமுலாக்கப்பட்டுவருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மேலும்

பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2023

பிரான்சில் கடந்த 24 ஆண்டுகளாக பிரான்சு மனிதநேய அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக்கழம் நடாத்தி வரும் ” கோடைகால தமிழர் விளையாட்டு விழா சென்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டானது பல்லாயிரம் தமிழ் மக்கள் பல்லின மக்கள், அரசபிரமுகர்கள், அனைத்து தமிழர் கட்டமைப்புக்கள்,விளையாட்டுக்கழகங்கள் வீரர்கள், வர்த்தகர்கள்,ஊடகவியலாளர்கள், இன உணர்வாளர்கள், குறிப்பாக இளையோர்களின் பங்கெடுப்புடன் சிறப்புடன் நடைபெற்றது.

மேலும்