ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 14 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

ஸ்ரீலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவெழுச்சி நாள் – 12.02.2023, ஜெனீவா, சுவிஸ்.

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் அதியுச்சமாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தக்கோரி ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின்14ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்!

மேலும்

தமிழினத்தின் கரிநாள்.. கவனயீர்ப்புப் போராட்டம் 04.02.2023

சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்!கவனயீர்ப்புப் போராட்டம். 04.02.2023, பேர்ண், சூரிச்

மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற
அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும்ரூபவ் தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத்தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள்

மேலும்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2023!

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையானதும்ரூபவ் தமிழ்ப் புத்தாண்டுமான தமிழர் திருநாள் பொங்கல்விழாவானது ஆண்டுதோறும் சுவிஸ் வாழ் உறவுகளுடன் நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தமிழர்திருநாள்; பொங்கல் நிகழ்வானது 15.01.2023 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் சுவிஸ் வாழ்தமிழர் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவிலும்; சிறப்பாக நடைபெற்றிருந்தது.

மேலும்

கப்டன் சுடர்மதி வீரவணக்க நாள்

கேப்பாப்புலவு பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முற்றுகைச் சமரின் போது 19.01.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் சுடர்மதி அவர்களின் 14ம் ஆண்டு நினைவில்……….

மேலும்

வேலன் சுவாமிகள் காவல்துறையினரால் கைது

காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் திருநாள் – 2023 பொங்கல் விழா!

பிரான்சில் உள்ள தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சென்தனி தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து கடந்த 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடியது.பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான சென்ரனி பிரதேச மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு பொங்கல் நிகழ்வு ஆரம்பமானது.

மேலும்

சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம்
படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின்
நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2023!

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 30ஆவது நினைவினை முன்னிட்டு 26வது தடவையாக இளையோர், பெண்கள், வளர்ந்தோர் பிரிவுகளுக்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது கடந்த 08.01.2023 ஞாயிறு மற்றும் 14.01.2023 சனி ஆகிய இரு நாட்களும் சூரிச், பேர்ண் மாநிலங்களில் அமைந்துள்ள உள்ளரங்க மைதானங்களில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

ஞானலிங்கேச்சுரத்தில் சுறவத்திங்கள் பொங்கல்விழா

15.01.2023 பேர்ன் நகரில் அமைந்துள்ள அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் தெய்வத் தமிழில் செந்தமிழ் திருமறை வழிபாட்டுடன் சுறவத்திங்கள் பொங்கல்விழாவும் – திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பும் மிகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

மேலும்