ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு…..! கேணல் ராயு…

அந்தச்செய்தி புற்றுநோய்போல மெல்லமெல்லத் தமிழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்து காற்று எம்தேசத்தின் தேகத்தை வாட்டியது. “யாராம்?” இந்த வினாவிற்கு விடைகாண எம்மக்கள் தவித்துக்கொண்டிருன்தனர். எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.

மேலும்

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின்… நினைவெழுச்சி நாள் 26.09.2020

இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ்.நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின்… 

மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு பூரண ஆதரவு

23.08.2020ஊடக அறிக்கை எதிர்வரும் 30.08.2020 அன்று சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். அன்றயதினம் வடக்குக் கிழக்கில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவினரால் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்,

மேலும்

கொரோனா காரணமாக பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2020 இரத்து!

பிரான்சில் மீண்டும் கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலைமையைக் கருத்திற்கொண்டு,  வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 11 வரைக்குமான தமிழ்மொழிப் பொதுத்தேர்வு – 2020 இரத்துச்செய்யப்படுகின்றது. 

மேலும்

இளந்தலைமுறைக்கு தாயக வரலாற்றறிவை மேம்படுத்தும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்!

இளந்தலைமுறையினருக்கு தாயகம் சார்ந்த வரலாற்றுத் தெளிவை ஊட்டும் முகமாக பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தாயக வரலாற்றுத் திறனறிவுப் போட்டியொன்றை அறிமுகம் செய்துள்ளது. இயங்கலையில் (ONLINE) இந்தத் தேர்வு நிகழ்த்தப்படுவதோடு பெறுபேறுகளும் சான்றிதழ்களும் உடனுக்குடன் கிடைக்கக்கூடியவகையில்  இத்தேர்வு அமைந்திருப்பது சிறப்பாகும். 

மேலும்

பிரான்சில் ஆறாவது வாரத்தில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்!

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 இன் ஆறாவது நாள் போட்டிகள் இன்று 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை சேர்ஜி பகுதியில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகிறது.

மேலும்

முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்க நாள் இன்றாகும்.

16.08.1994 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை கடற்பரப்பில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையினரின் A 516 “கட்டளைக் கண்காணிப்புக் கப்பல்” மற்றும் அதிவேக “டோறா” பீரங்கிக் கலம் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

பிரான்சில் உணர்வடைந்த செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடி அவர்களினதும் நினைவேந்தல்!

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 14 ஆவது ஆண்டு நினைவு நாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 9 வது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு றிபப்ளிக் பகுதியில் இன்று 15.08.2020 சனிக்கிழமை பிற்பகல்15.00 மணிக்கு கோவிட் 19 சட்டதிட்டங்களுக்கு அமைவாக இடம்பெற்றது.

மேலும்

தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் 32வது ஆண்டு நினைவினை முன்னிட்டு, 24வது விளையாட்டுப் போட்டிகள் – சுவிஸ் 23.08.2020

இந்திய ஆக்கிரமிற்கு எதிராக உண்ணா நோன்பிருந்து தேசத்தின் விடுதலைக்காக மூச்சுக் கொடுத்த தியாக தீபம் அன்னைபூபதி அம்மாவின் 32வது நினைவினை முன்னிட்டு 24வது விளையாட்டுப் போட்டி.

மேலும்

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்!

தமிழ்மொழிப் பொதுத்தேர்வு – 2020 இனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடாத்துவது தொடர்பாகக் கடந்த 26-07-2020 அன்று நந்தியாரில் நடைபெற்ற தமிழ்ச்சோலை நிர்வாகிகள் சந்திப்பில், தமிழ்ச்சோலை நிர்வாகிகளிடையே கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது.  இதன்போது 69.2 வீதமான நிர்வாகிகள் தேர்வு நடாத்துவதற்கு உடன்பட்டிருந்தனர். அத்துடன், தேர்வு நடாத்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவானது நாட்டு நிலைமையைக் கருத்திற்கொண்டு ஓகஸ்ட் இருபதாம் நாளன்று அறிவிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஒக்டோபர் மாதத்தில் தேர்வு நடாத்தக்கூடிய சூழ்நிலை நிலவுமாயின், பெரும்பான்மையான நிர்வாகிகளின் கருத்திற்கமைய தேர்வினை நடாத்துவதற்கான முன்னேற்பாடுகளை நாம் மேற்கொண்டுவருகின்றோம். இதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு ஒக்டோபர் மாதம் தேர்வை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆயினும், நாட்டுநிலைமை தேர்வு நடாத்துவதற்குப் பொருத்தமற்றதாக அமையுமாயின், இவ்வாண்டிற்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வினை இரத்துச் செய்து, அதற்கான மாற்றுவழிகளைச் செயற்படுத்துவது தொடர்பாகவும் நாம் ஆலோசித்தவாறேயுள்ளோம். உள்ளிருப்பில் இருந்து வெளியேறி, மாணவர்கள் பள்ளிகளுக்கு வருதல் கட்டாயம் என்ற நிலைப்பாட்டை பிரான்சு அரசு எடுத்துள்ள நிலையில்,தமிழ்ச்சோலைகளும் செப்டெம்பர் முதல் வழமைபோல் இயங்கக் கூடியதாகவிருக்கும் என எதிர்பார்க்கின்றோம். அதன்படி, தேர்வினையும் ஒக்டோபரில் நடாத்தக்கூடியதாகவிருக்கும் என்பது…

மேலும்