யாழ்.அடாவடிகளைக் கண்டிக்கும் சட்டத்தரணிகள் சங்கம்!

மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் பொருளாளருமான திரு.றோய் டிலக்சன் அவர்களின் ஆதனத்திற்குள்

மேலும்

டிக்கோயா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் தொழிலாளி உயிரிளப்பு!

நுவரெலியா – ஹட்டன் பொலிஸ் பிரிவு, டிக்கோயா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதன்போது எபோட்சிலி தோட்டத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அம்பிகாமலர் (48-வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். டிக்கோயா தோட்ட தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருக்கையில் இன்று (25) காலை 10 மணியளவில் மரமொன்றிலிருந்த குளவிக் கூட்டை கழுகு கொத்தியதில் குளவி கூடு கலைந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்கள் மீது குளவிகள் கொட்டியுள்ளன. குளவி கொட்டுக்கு இலக்காகிய ஆறு பெண்களும் இரண்டு ஆண்களுமாக எட்டுபேர் காயமுற்றுள்ளனர். இவர்களில் ஒருவரான குறித்த தாய் மரணமாகியுள்ளார்.

மேலும்

தென் தமிழீழத்தில் தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் தாயகப் பிரதேசங்களை அபகரிப்பு

கிழக்கு மாகாண தொல்லியல் சார்ந்த இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கபடும் என கோத்தபாயா ராஜபக்சே அறிவித்து இருக்கிறார்.

மேலும்