ஸ்ராஸ்பூர்க் மாநகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு

27.11.2023 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2023 – சுவிஸ்

தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை தமிழினம் தலைதாழ்த்தி வணங்கி, நிமிர்ந்து உரம் பெறுகின்ற நவம்பர் மாதத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் ஆண்டுதோறும் நடாத்துகின்ற பேச்சுப்போட்டி உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

மேலும்

“மொழியாகி எங்கள் மூச்சாகி” பாடல் ஒலிப்பதிவு அனுபவம்

இசையோடு வாழ்தல் தமிழரின் வாழ்வியல் மரபு. தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதில் இசையின் பங்கு உன்னதமானது. அந்தவகையில் மண்ணிலே விதையாகும் மாவீரக்கடவுளரை வணங்கி வழிபடுவதற்கென்று ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்று தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் எண்ணங்கொண்டார். அதன்படியே மாவீரர்துயிலுமில்லத்தில் வீரர்களை விதைக்கின்றபோதிலும், மாவீரர் நாளன்று ஊர்கூடி உறவுகள்கூடி மாவீரர்களுக்கு விளக்கேற்றும் அந்தப்பொழுதிலும் அப்பாடலை ஒலிபரப்பி இசையால் மாவீரர்களின் நினைவுகளை மீட்டி ,அவர்களை உளம் நிறைத்து உணர்வேற்றிக்கொள்ளும் பெருமைக்குரிய பாடல் பிறந்தது.

மேலும்

மாவீரர் நினைவுக்கல் அமைந்துள்ள லவுசான் மாநிலத்தில் நினைவு கூரப்பட்ட நடுகல் வழிபாடு

தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவேந்தும் வகையில் 21.11.2023 செவ்வாய் 17:45 – 18.15 மணிவரை சுவிஸ் நாட்டின் லவுசான் மாநிலத்தின் இவர்டோன் நகரில் அமைக்கப்பெற்றுள்ள மாவீரர் நினைவுக்கல்லுக்கான நடுகல் வழிபாடு உணர்வோடு நடைபெற்றது.

மேலும்