பிரான்சு பாராளுமன்ற முன்றலில் ஆரம்பித்த ஐ.நா நோக்கிய நீதிக்கான பயணமும் நிணல்படக் காட்சிப்படுத்தலும்.

0 0
Read Time:2 Minute, 46 Second

தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 01/09/2021 புதன் கிழமை காலை 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் பிரான்சு பாராளுமன்ற முன்றலிருந்து புறப்பட்டது. அத்துடன் பிரஞ்சு பாராளுமன்ற முன்றலில் காலை 10 மணி முதல் மாலை 17மணி வரை கவனயீர்பு மற்றும் தமிழர்ப்படுகொலை ஆதாரப் புகைப்பட காட்சிப்படுத்தல் நடைபெற்றது.

நீதிக்கான பயணப் தொடர்ந்து பாரிஸ் 7, 6, 5, 13 நகரசபைகளில் நகரசபை முதல்வரின் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்று எமது கோரிக்கையடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து இவ்றி சூ சென் ( Ivry-Sur-Seine) நகரசபையில் மனு கையளிக்கப்பட்டு தொடர்ந்து வித்திரி சூ சென் (Vitry sur seine) நகரசபையில் நகரசபை முதல்வர் மற்றும் சர்வதேச அரசியலுக்கு பொறுப்பான உதவி நகரசபை முதல்வர், நகரசபை உறுப்பினர்களுடன் சந்திப்பு இடம்பெற்றது, தமிழ் மக்களுடைய நியாயமான போராட்டத்திற்கு தங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என்பதை தெரிவித்திருந்தனர். வித்திரி சூ சென் (Vitry sur seine) நகரசபை கடந்த மே மாதம் தமிழ் மக்களுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சறொந்தன் லா பொந் (Charenton-le-pont) நகரசையின் முதலாவது உதவி நகரசபை முதல்வர் அவர்களுடன் சந்திப்பு இடம்பெற்றுது. தொடர்ந்து சென் மொறிஸ் (Saint-Maurice) நகரசையில் நகரசபை முதல்வரின் அலுவலக இயக்குனருடன் சந்திப்பு இடம்பெற்று யுவான் வீல் லா பொந் (Joinville-le- Pont ) அலுவலக இயக்குனருடனும் சந்திப்பு இடம்பெற்று தொடர்ந்து நொயோ சூ மாறன் (Nogent sur marne), நோய்சி லா குறோன் (Noisy-le-Grand), குவாசி போபூர் (Croissy-Beaubourg) நகரசபை முதல்வர்களிடம் எமது கோரிக்கையடங்கிய மனு கையளிக்கப்பட்டு முதல் நாள் ஐ.நா நோக்கிய நீதிக்கான பயணம் Croissy-Beaubourg நகரசபையுடன் நிறைவு பெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment