திலீபன் அண்ணா உண்ணாநோன்பை மேற்கொண்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத்தமிழர்கள் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளுக்குப் பதிலளிக்காமையால் அவ்வுண்ணாவிரதப் போரானது இந்திய அரசை நோக்கி வினா எழுப்பி நின்றது. ஆனால் இறுதிவரைக்கும் அதற்கான பதில் கிடைக்வில்லை. உணவும் உண்ணாமல் மற்றும் நீரும் அருந்தாமல் 12 நாட்களாக திலீப்பன் அண்ணா இயற்றிய தவத்தின் முடிவில் அவரின் உயிர் பிரிந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூன்றாவது தலைமுறையினராகிய நாங்கள் திலீபனண்ணாவின் 30ம் ஆண்டு நினைவையொட்டி ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இப்போராட்டத்தினூடாக எங்களால் முன்வைக்கப்பட்டுள்ள 10 கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கவுள்ளோம். முன்வைக்கப்படும் கோரிக்கைகள் இலங்கை, சுவிஸ் அரசுகளையும் மற்றும் சர்வதேச சமூகத்தையும் நோக்கியதாக இருக்கும்.

அத்துடன் திலீபன் அண்ணாவினால் எழுச்சிப்படுத்தப்பட்ட சமூகப் புரட்சியையும் தமிழீழச் சமூகத்திற்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம். இச்சமூகப் புரட்சிக்குள் பெண்விடுதலை மற்றும் சகல சமூக அடக்குமுறைகளுக்கும் எதிரான விழிப்புணர்வு என்பன உள்ளடங்குகின்றன.
அத்துடன் தமிழிறைமை என்பது விட்டுக்கொடுக்கப்படமுடியாதது என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

உங்கள் அனைவரையும் இந்நிகழ்விற் பங்குகொள்ள அழைக்கின்றோம்.

வெல்வது உறுதி
அக்கினிப் பறவைகள்- புதிய தலைமுறை / Phoenix TNG

தொடக்கம்:
26.09.2017
10.30
Bern Waisenhausplatz

தொடர்ந்து:
14.00
Verein Saivanerikoodam
Europaplatz 1
3008 Bern

விசேட பூசை:
ca. 19.30
Verein Saivanerikoodam
Europaplatz 1
3008 Bern