இருப்பு முகநூல்

முகநூல் உங்களை வரவேற்கிறது

சிறுவர்தளம்

tom-jerry9789789

Irupputv

thee

மின்னஞ்சல்கள்

தொலைக்காட்சிகள்

உகண்டாவின் இடி அமீன் தாதாவை இலகுவில் யாரும் மறந்துவிட முடியாது. 20ம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான மனிதர்களில் ஒருவராக இருந்தவர். 1971 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்த இவர், சுமார் இரண்டரை இலட்சம் மக்களை (ஐ.நா. கணிப்பு) மிகக்கொடூரமாக கொன்று குவித்திருக்கின்றார். இதனால் உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவராக இவர் வர்ணிக்கப்பட்டவர்.

 

கடந்த வாரம் இந்த நாட்டுக்குத்தான் மனித உயிரழிப்பில் இன்னொரு இடி அமீனாக வர்ணிக்கப்படும் சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் சென்று செங்கம்பளத்தில் நடந்துவிட்டு நாடுதிரும்பி, தமிழின அழிப்பின் வெற்றிவிழாவை கொழும்பில் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றார்.

உகண்டாவின் இந்த இடி அமீன் தாதா குறித்து எத்தனையோ அதிர்ச்சி தரும் தகவல்கள் உண்டு. அவர் மனித மாமிசம் சாப்பிடுபவர் என்றும் மனித இதயங்களையும், ஈரலையும் ரசித்து, ருசித்து உண்பவர் என்றும் கூறப்படுகின்றது. ஆனால், அவர் மனித மாமிசம் சாப்பிட்டதை யாரும் பார்த்தில்லை. அவருக்கு உணவு பரிமாறுபவராக, அவருடைய சமையல்காரராக இருந்த OTONDE ODERA என்பவரும் தான் எப்போதும் அவர் மனித மாமிசம் உண்டதைப் பார்த்ததில்லை என்று சொல்லியிருக்கின்றார்.

ஆனால், மற்றவர்களை அவர் அச்சுறுத்தும்போது, ‘உன் இதயத்தைத் தின்று விடுவேன் என்றும் உங்களது குழந்தைகளைக் கொன்று தின்ன ஆசையாக இருக்கிறது என்றும் தனது அமைச்சர்களையே அடிக்கடி இடி அமீன் மிரட்டியதாகத் தகவல்கள் உண்டு. எனினும், இடி அமீன் மனித மாமிசத்தை உண்டதற்கான எந்தவொரு ஆதாரங்களும் இல்லை என்பதுதான் உண்மை.

இப்போது சிரியாவில் இடி அமீனையே விஞ்சும் வகையில் மனித இதயத்தை உண்ணும் காட்சி வெளியாகி உலகையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வருகின்றது. இலங்கையில் சிறீலங்காவின் இனக் கொடுங்கோலுக்கு எதிராகப் போராடிய விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று வர்ணிக்கின்ற உலகம்தான், சிரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் பஷீர் அல் ஆசாத்திற்கு எதிராகப் போராடும் போராளிகளுக்கு ஆதரவுக் கரம் கொடுத்து நிற்கின்றன. உதவிகளை நேரடியாகவும் வழங்கிவருகின்றன.

இந்த நிலையில்தான், இந்தப் போரின் உச்சக் கொடூரமாக மனித இதயத்தை மனிதன் உண்ணும் இந்தக் காட்சி வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட சிரிய இராணுவச் சிப்பாய் ஒருவரின் இதயத்தை வெட்டியெடுத்து, ஆசாத் படையினருக்கு எதிராகப் போராடும் சிரிய விடுதலைப் படைப் போராளி ஒருவர் உண்ணுகின்ற காட்சி தான் அது. குறிப்பிட்ட சிப்பாய் உயிருடன் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டரா அல்லது போரில் கொல்லப்பட்ட ஒரு சிப்பாயா என்பது தெரியாதபோதிலும், அவரது உடலத்தின் மார்பை பிளந்து அவரது இதயத்தை வெளியே எடுக்கும், ஆசாத் படையினருக்கு எதிராகப் போராடிவரும் பரூக் படை என்னும் போராளிகள் குழுவின் தலைவரான அபு சக்கார் என்பவர், ‘பஷீர் நாயின் கைக்கூலிகளான இராணுவமே.. உங்கள் இதயம் மற்றும் ஈரல்களை தின்று விடுவோம் என்று இறைவன் மீது ஆணையிடுகிறோம்’ என்று பலமாகக் கூறியபடி அதனை உண்பதாக அந்தக் காணொளி அமைந்துள்ளது.

கணொளி இணையத் தளங்களில் வெளியாகி மனித உரிமை அமைப்புகளை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெளியான ஒரு காட்சி இத்தனை அதிர்ச்சியளிப்பதாக இருந்தால், அங்கு நடக்கும் போரில் வெளிவராத எத்தனை கொடூரங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றனவோ என்ற கேள்வியே எழுந்துநிற்கின்றது. இந்நிலையில், இன்னொரு காணொளி வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்காப் படையினர்

தங்களின் கைகளில் அகப்பட்ட போராளிகளையும் பொது மக்களையும் கண், கைகளைக் கட்டிச் சுட்டுப் படுகொலை செய்ததுபோன்று, தங்கள் கையில் உயிருடன் அகப்பட்ட ஆசாத்தின் படையைச் சேர்ந்த 11 பேரை எதிரணியினர் கண்ணையும் கைகளையும் கட்டிவிட்டு பின்னால் நின்று சுட்டுக்கொல்கின்ற காட்சிகள் வெளியாகி பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. 11 படையினரும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வரிசையாக மண்டியிட்டு அமரச் செய்யப்பட்டுள்ளனர். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் முழங்காலிட்டு குனியும்போது, பின்னால் இருக்கும் ஒருவர் அவர்களின் பின்னந் தலையில் சுட்டுக் கொல்வதாக காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதே பாணியிலேயே சிறீலங்காவும் தமிழர்களை சுட்டுக்கொல்லும் காட்சிகளை பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி அம்பலப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. உயிருடன் பிடிக்கப்படும் படையினரைக் கொல்லக்கூடாது என்றும் சர்வதேச போரியல் சட்டவிதிகளுக்கு அமைவாக நடத்தவேண்டும் என்றும் கூறப்படுகின்ற நிலையில், ‘சிரியாவில் உள்ள நமது சகோதரர்களையும் அவர்களது குடும்பத்தையும் அழித்த இவர்களுக்கு டெயிர் அல்சாரின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷரியா நீதிமன்றம் மரண தண்டனை அளிக்கின்றது’ என்று இந்த தண்டனையை நிறைவேற்றிய போராளி ஒருவர் தெரிவிப்பதுடன் அந்தப் படுகொலைக் காட்சிகள் முடிவடைகின்றன.

அதிபர் பஷீர் அல் ஆசாத்திற்கு எதிராகப் போராடுபவர்களுக்கு ஆதரவு கொடுத்துவரும் மேற்குலகத்திற்கு இவ்வாறான சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. சிரிய எதிர்ப்படையினருக்கு வெளிப்படையான ஆதரவுகளை வழங்கும் மேற்குலக நாடுகள் அதனை மீள் பரிசீலனை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஏனெனில், சிறீலங்கா இன அழிப்பை நடத்தியபோது ஐ.நா. தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேறி, மகிந்தவின் சாட்சியமற்ற இன அழிப்புப் போருக்கு உடந்தையாக இருந்தது. ஆனால், சிரியாவில் அப்படியல்ல. ஐ.நா. கண்காணிப்பாளர்கள் நூற்றுக் கணக்கில் அங்கு நிலைகொண்டிருக்கும் நிலையிலேயே இந்தக் கொடூரங்கள் அங்கு அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

இவர்களின் கொடூரங்கள் இவ்வாறிருக்க, மறுபக்கத்தில் ஆசாத்தின் சிரியப் படைகளும் சும்மா இருக்கவில்லை. அவர்களும் மனித உரிமை மீறல்களில் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களும் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. சிரியா இராணுவத்தால் கண், கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாகச் சித்திரவதை செய்யப்படும் பெண் ஒருவரின் காணொளிக் காட்சி  வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறீலங்கா இராணுவம் அப்பாவித் தமிழ் மக்களைக் கைது செய்து கொடூரமாகச் சித்திரவதை செய்வதுபோன்றே, சிரிய இராணுவமும் அப்பாவி மக்களைக் கைது செய்து கொடும் சித்திரவதைக்கு உட்படுத்தி வருகின்றது. ஏற்கனவே சிரிய இராணுவம் மீது மனித உரிமை அமைப்புக்களின் கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், பெண் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்யும் இந்தக் காட்சி வெளியாகியுள்ளது. ‘உனக்கு சுதந்திரம் வேண்டுமா? நீ கேட்ட சுதந்திரம் இது தான். அனுபவித்துகொள்’ என்று சொல்லிச் சொல்லி அப்பெண்ணை மூன்று, நான்கு படையினர் அடித்து சித்திரவதை செய்கின்றனர்.

சிரியாவில் இரு தரப்பும் மிக அதிகளவாக போர்க் குற்றங்களிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், இரு தரப்பினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றமைக்கு ஆதாரமாக இக்காணொளிகள் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றை விட ஏராளமான மனித உரிமை மீறல்களுக்கு சாட்சி பகரும் காணொளிகள் சிரியாவில் இருந்து ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் தற்போது மேலும் அதிர்ச்சியூட்டுபவையாக இவை அமைந்து வருகின்றன.

சிரியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு ஐ.நா. மனித உரிமைகள் பொதுச் செயலர் நவிப்பிள்ளை தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், மனித உரிமை மீறல்களில், போர்க் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தமது தரப்பாக இருந்தாலும் தண்டனை வழங்கப்படும் என இரு தரப்பும் கூறிவருகின்றனர்.

ஆனாலும் இவ்வாறான சம்பவங்கள் அங்கு தொடர்ந்து அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. சிரியப் போர் ஆரம்பமாகி இரண்டாண்டுகளுக்குள் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை எட்டுவதாக மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன. இவற்றை விட ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த மண்ணிலும், அயல் நாடுகளிலும் அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். ஆசாத் எதிர்ப்படைப் போராளிகளுக்கு மேற்குலக நாடுகளின் ஆதரவு வெளிப்படையாக இருந்தபோதும் இதுவரை ஆசாத் ஆட்சியை ஆட்டம்காண வைக்கமுடியவில்லை. தனது சொந்த நாட்டு மக்களுக்கு ஏற்படும் அழிவுகளைப் பார்த்தும் ஆசாத் பதவி விலகும் அறிகுறிகளும் தென்படவில்லை. நாளுக்கு நாள் போர் மோசமடைந்துகொண்டே செல்கின்றது.

தனது சொந்த பொதுமக்கள் மீது சிறீலங்கா அரசு இரசாயன ஆயுதங்களை உபயோகித்தது போலவே, சிரியப்படையினரும் இரசாயண ஆயுதங்களைகப் பாவிப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இரசாயன ஆயுதங்களை பஷார் அல் அஸாதின் அரசு பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. போராளிகள் பயன்படுத்தியதாக வெளியான தகவல்களை மறுத்திருந்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி, எதிர்ப்பாளர்கள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சிலர் கூறுவதை ஏற்க இயலவில்லை.

உண்மையில், அப்போது அதிபர் பஷார் அல் ஆசாத்தின் அரசுதான் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். இதுவே எங்களின் நிலைப்பாடு என்று கூறியிருந்தார். அத்துடன், இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் புலன்விசாரணை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக தங்கள் உளவுத்துறை மேற்கொண்ட மதிப்பீடுகள் மிகவும் முக்கியமானவை. அதனால்தான் தாங்கள் அவற்றைப் பகிரங்கமாக வெளியிடுகின்றோம் என்றும் ஜே கார்னி கூறியிருந்தார்.

இதற்கிடையே சிரியப் போருக்குள் இஸ்ரேலும் மூக்கை நுழைத்துள்ளது. சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், 45 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். சிரியாவில், தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதை சுற்றியுள்ள, மூன்று ஆயுத கிடங்குகள் மீது, இஸ்ரேல் கடந்த 5ம், 6ம் திகதிகளில் இரண்டு நாட்கள் வான் தாக்குதல் நடத்தியது. லெபனான் நாட்டில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு ஆயுத விநியோகம் செய்வதற்காக இந்தக் களஞ்சியங்களில் ஏவுகணைகள் வைக்கப்பட்டிருந்ததாகவும், இதை அழிப்பதற்காக தான் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.

ஆனால், அழிக்கப்பட்டவை தலைநகர் டமஸ்கஸில் அமைந்துள்ள சிரிய இராணுவத் தளம், ஆயுதக் களஞ்சியம் மற்றும் போர் விமானப் பிரிவு ஆகிய மூன்று முக்கிய இடங்கள். எனவே, ஆசாத்தின் படை பலத்தை அழிப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அவதானிகள் கருதுகின்றார்கள்.

இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிரிய அரசு ஐ.நா. சபைக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், இதற்குப் பதிலளிக்கும் முகமாக பான் கி மூன் அலுவலகம் அறிக்கையன்றை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில், சிரியா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்த விவரம் கிடைக்கவில்லை என்றும் என்ன நடந்தது என தன்னிச்சையாக சரிபார்க்கும் நிலையிலும் ஐ.நா. இல்லையெனத் தெரிவித்துள்ளது. அத்துடன், இருதரப்பும் மோதல் போக்கை கைவிட்டு அமைதி காக்க வேண்டும். உள்நாட்டுப் போர் காரணமாக ஏற்கனவே சிரியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பதற்றத்தைத் தணிக்க பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

எல்லா நாடுகளும் மற்ற நாடுகளின் இறையாண்மை மற்றும் எல்லைக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும். பாதுகாப்பு சபையின் தீர்மானங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. சிரியாவுக்கு நிதி, ஆயுதங்கள், உளவுத் தகவல்களை ஈரான் வழங்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுவரும் நிலையில் ஈரான் இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, ஆசாத்தை பதவியில் இருந்து ஆட்டம் காணவைக்கமுடியாத நிலையில், பெரும் அழிவுகளுடன் நீண்டு செல்லும் சிரியப் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு தரப்பும் முயன்றுவருகின்றது. இது தொடர்பாக அண்மையில் அமெரிக்கா, ரஷ்யா நடத்திய ஆலோசனை கூட்டத்தில் சிரிய விவகாரம் குறித்து சர்வதேச மாநாட்டை கூட்டி விவாதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டை ஈரான் கூட வரவேற்றுள்ளது. மாநாட்டிற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று ஈரான் துணை பிரதமர் முகமது ஜாவித் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கிடையே, இந்த மாநாட்டை முன்னிட்டு ஜோர்டான் தலைநகர் அம்மான் இல் வருகிற 22ம் திகதி புதன்கிழமை முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் கெர்ரியும் பங்கேற்கிறார். அதன் பின்னர் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு வார சுற்றுப்பயணமும் செய்கிறார்.

இந்த மாநாடுகள் சிரியாவில் நடக்கும் போரை நிறுத்துமா?

மிக மோசமான மனித உரிமை மீறல்களை, பேரழிவுகளைச் சந்திக்கும் அந்த மக்கள் அதில் இருந்து மீளுவார்களா?

நன்றி: ஈழமுரசு

01.05.14

சுவிஸ் may1 (640x453)

19.4.14 – 20.04.14

பிரான்ஸ் tamilcholai (495x640)

20.04.14

பிரான்ஸ் annai (452x640)

27.04.14

சுவிஸ் muttukumar (600x424)

01.05.2014

பிரான்ஸ் unnamed (2) (640x452)

18.05.14

பிரான்ஸ் may18fr (640x445)
தமிழீழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத, சந்தித்திராத சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது ~ ஆனந்தபுர பெரும் சமர். anandhapuram (458x640)

அவசர உதவி !

arul (600x411)

நலன் காப்போம்

nam

நாணயமாற்றுத்தளம்

சிறப்பு இணைப்புக்கள்

மரண அறிவித்தல்

death (144x159)