மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு,வர்த்தக அமைப்புகள் பூரண ஆதரவு

வடக்கு – கிழக்கு மாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்காக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது.

கடந்த 18 நாட்களாக அநுராத புரம் சிறைச்சாலையில் உண்ணா விரதம் இருக்கும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் நியாயபூர்வமான கோரிக்கைகளை ஏற்று அவ ற்றை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி கடந்த 04.10.2017 அன்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாகிய நாம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு இருந்தோம்.

இதற்கு உரிய தரப்பினர் அது தொடர்பாக கவனம் செலுத்தி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே அந்த மூன்று அரசியல் கைதிகளின் மோசமடைந்து வரும் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர்களது நியாயபூர்வ மான கோரிக்கைகள் உடனடியாக தீர்க் கப்பட வேண்டும் என்று கோரி நாளை (வெள்ளிக் கிழமை) அன்று வடக்குகிழக்கு மாகாணம் தழுவிய பூரண கதவடைப்புக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாகிய நாம் தமிழ் மக்களிடம் அழைப்பு விடுக்கின்றோம்.

இப்போராட்டத்துக்கு அனைத்து வர்த்தக சங்கங்கள், பாடசாலைகள், சிவில் சமூக அமைப்புக்கள், அரச நிறுவனங்கள், ஏனைய தனியார் நிறுவனங்கள் அனைத்தும் பூரண ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக் கொள் கிறோம்.

மேலும் இது சம்பந்தமாக உடனடியாக உரிய தரப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாதவிடத்து இப்போராட்டத்தை தொடர்ச்சியாக வேறு வடிவங்களில் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்படும் என் பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றுள்ளது.

வர்த்தக அமைப்புகள் பூரண ஆதரவு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை வெள்ளிக்கிழமை வட மாகாணத் தில் நடைபெறவுள்ள பூரண கதவ டைப்புக்கு கிளிநொச்சி பொதுச் சந்தையைச் சேர்ந்த சகல வர்த்தக நிலையங்களை மூடி பூரண ஆத ரவை வழங்குவதாக கிளிநொச்சி வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித் துள்ளார்.