செம்மலை மண்தந்த முத்து கப்டன் ஆனந்தன்

சுப்பிரமணியம் கருணாகரன் எனும் இயற்பெயர்கொண்ட கப்டன் ஆனந்தன் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் மறவா மாவீரன். தமிழீழத்தின் இதயபூமியான முல்லைத்தீவு,மணலாறு மாவட்டம் செம்மலை எனும் அழகிய ஊரில் சுப்பிரமணியம் அழகலட்சுமி இணையரின் மகனாக 22.11.1968 அன்று பிறந்தார்.

மேலும்

பிஞ்சு மனதில் முளைவிட்ட பார்த்தீபன் கனவு!

ஈழ மக்கள் விடிவுக்கான ஐந்தம்சக் கோரிக்கையை முன் வைத்து அறப்போர் வழியில் மேற்கொள்ளப்பட்ட தியாக தீபம் திலீபன் அண்ணாவின் சாகும் வரையான உண்ணாவிரதப்  போராட்டம் அந்த இளம் பிஞ்சின் மனதில் கூட ஆழமான உணர்வலைகளை உண்டாக்கியிருந்தது. 

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. ‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஒன்பதாம் நாள்

ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் எட்டாம் நாள்

இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன.

மேலும்