இத்தாலியில் பலெர்மோ நகரில் சிறப்பான பட்டத்தை பெற்று ஈழத்தமிழர்களை பெருமைபடச்செய்த ஈழப் பெண்மணிக்கு பட்டமளிப்பு.

இத்தாலி பலெர்மோ நகரில் கடந்த 3 தசாப்தங்களாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்தவரான திரு.திருமதி. பாலசிங்கம் அவர்களின் புதல்வி செல்வி. வினுசா அவர்கள் 15.10.2021 பலெர்மோவில் Universita degli Studi di Palermo பல்கலைக்கழகத்தில் ( பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத்துறை) இதற்க்காக நடைபெற்ற தேர்வில் மொத்தமாக எடுக்க வேண்டிய 110 புள்ளிகளில் 109 புள்ளிகளைப் பெற்று சிறந்த மாணவியாக செல்வி. வினுசா பாலசிங்கம் தெரிவாகியுள்ளார். இவருக்காக சிறப்பான பட்டமளிப்பையும்> மதிப்பளித்தலையும்> Prof. Lo Verde Massimo அவர்களும் Prof.ssa Perra Alessandra> Prof. Simon Fabrizio, Prof. Asmundo Adam, ஆகியோர் செல்வி. வினுசா விற்கு பட்டமளித்து மதிப்பளித்திருந்தனர். பட்டமளிப்பில் கலந்து கொண்ட பலநூறு மாணவர்களில் எம்தேசப்புதல்வி சிறப்பான பட்டத்தை பெற்றுக்கொண்டமை இங்கு வாழும் தமிழ்மக்களுக்கு இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் இத்தாலி வாழ் தமிழ் மக்களுடன் கரம் கோர்க்கும் பலெர்மோ மாநகராட்சி.

இன்று 24/09/2021 தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 34ம் ஆண்டின் 10வது நினைவு நாளை நாம் கடந்து செல்லும் இவ்வேளையில், இன்றும் விடுதலைப் பசி தீராத எம் திலீபனின் கனவும் அர்ப்பணிப்பின் நோக்கமும் நிறைவேற வேண்டும் என்றால் தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய கட்டமைப்புகளும் தாம் வாழும் நாடுகளில் தொடர்ந்தும் எமது தாயக விடுதலைக்கும், இன அழிப்பிற்கான நீதிக்குமாகப் போராட வேண்டும். அந்த வகையில், இன்று இத்தாலியின் பலெர்மோ மாநகராட்சியும், இத்தாலி தமிழர் ஒன்றியமும் இணைந்து தமிழின அழிப்பை உறுதிப்படுத்துவதற்கும், இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளவிருக்கும் அரசியல் நகர்வுகளுக்குமான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கையொப்பமிட்டுள்ளனர்.

மேலும்