சுவிற்சர்லாந்து நடுவனரசின் 12. 03. 2021 அறிவிப்பு

0 0
Read Time:9 Minute, 21 Second

12. 03.2021 வெள்ளிக்கிழமை சுவிஸ் அரசு ஊடக மாநாட்டில் தற்போதைய முடக்கத்திலிருந்து மெல்ல வெளிவரும் தமது நடவடிக்கையினை விளக்கியது.

இச்சந்திப்பில் சுவிஸ் அதிபர் திரு. குய் பார்மெலின் மற்றும் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே ஆகியோர் தகவல்களை வழங்கினர்.

சுவிசரசு தற்போது கடைப்பிடிக்கும் மகுடநுண்ணித் (கோவிட்-19) தொற்றுத் தடுப்பு நடவடிக்கை முறைகளை விளக்கினர். அடுத்த வெள்ளி 19. 03. 21 மேலும் சில தளர்வு நடவடிக்கைகள் அறிவிக்கப்படும். தளர்வுகள் தொடர்பில் மாநில அரசுடன் சுவிஸ் நடுவனரசு கலந்துபேசி வருகின்றது. இரண்டாம் கட்ட தளர்வுகள் எப்போது அறிவிக்கப்படும் என்பதை இன்னும் உறுதிப்படுத்தி அறிவிக்கமுடியவில்லை. இதன் பெறுபேறுகள் அடுத்த கிழமை எதிர்பார்க்கலாம்.

  1. 2021 திங்கட்கிழமை முதல் இத்தளர்வு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருகின்றன:

தனியார் சந்திப்புக்கள்

குடும்பச் சந்திப்புக்களில் இதுவரை ஆகக்கூடியது 5வர் பங்கெடுக்கலாம் என இருந்து வந்தது. எதிர்வரும் திங்கள் முதல் இத்தொகை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டு, 10 குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் சந்தித்துக்கொள்ளலாம்.

இத் தளர்வு அறிவிக்கப்பட்டாலும், முடிந்தளவு பல்லில்லங்களில் இருந்து பல் குடும்பங்களாக ஒன்றுகூடுவதைத் தவிர்க்க சுவிஸ் அரசு வேண்டுகை விடுத்துள்ளது.

உணவகங்கள்

உணவகங்கள் விருந்தினர்களை தமது வெளியரங்கு உப்பரிகைத் தளங்களில் அனுமதிக்கலாம்.

விருந்தினர் எழுந்து உலாவுதலாகாது.

உணவகத்திற்கு வருகை அளிக்கும் விருந்தினர்கள் கட்டாயம் இருக்கையில் இருக்க வேண்டும்.

உணவு உண்ணும்போது மட்டும் பாதுகாப்பு முகவுறையினை நீக்கிக்கொள்ளலாம்.

ஏனையபடி உணவக வளாகம் முழுவதும் முகவுறை அணிந்திருத்தல் கட்டாயம் ஆகும்.

ஒரு மேசையில் ஆகக்கூடியது 4வர் மட்டுமே இருக்கலாம்.

ஒருமேசைக்கும் அடுத்த மேசைக்கும் இடையில் குறைந்தது 1.5மீற்ரர் இடைவெளி; பேணப்பட வேண்டும் அல்லது தடுப்புச்சுவர் இருக்கவேண்டும்.

பொழுதுபோக்கு நிறுவனங்கள்

பொது ஓய்வு- மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்கள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படுகின்றது.

விலங்குக்காட்சிசாலை மற்றும்  தாவரவியல் பூங்கா என்பன முழுமையாகத் திறக்கலாம்.

கட்டட உட்பகுதியில் அனைவரும் முகவுறை அணிந்திருத்தல் கட்டாயமாகும்.

எப்போதும் உரிய இடை வெளி பேணப்பட வேண்டும்.

பார்வையாளர்களுடன் நிகழ்வுகள்

ஆகக்கூடியது 150 ஆட்கள் பார்வையாளர்களாகப் பங்கெடுக்கக்கூடிய நிகழ்வுகள் வெளி அரங்கில் நடைபெறலாம். இது உதை பந்தாட்டப் போட்டி போன்ற நிகழ்விற்குப் அல்லது திறந்த வெளி இசை நிகழ்வுகளுக்குப் பொருந்தும்.

வெளியரங்கில் இல்லாமல் நிகழ்வு உள்ளரங்க நிகழ்வாகின் ஆகக்கூடியது 50 ஆட்களே பங்கெடுக்கலாம்.

இவ்விதி திரையரங்கு, நாடகவரங்கு, நிகழ்வரங்குகளுக்கும் பொருந்தும்.

அரங்கின் அளவு வழமையான கொள்ளளவில் 3ல் ஒருபகுதி ஆட்களே மேற்கூறிய ஆக்ககூடிய தொகையாக அமையலாம். அதாவது 50 மக்கள் இருக்கும் உள்ளரங்கின் அளவு 150 ஆட்கள் கொள்ளக்கூடிய அளவாக இருக்க வேண்டும்.

ஆட்கள் எழுந்து உலாவலாகாது

இருக்கையில் இருத்தலும் இத்தளர்வின் நிபந்தனையாகும்.

அதுபோல் உரிய இடைவெளி 1.5 மீற்றர் கடைப்பிடிக்கப்பட வேண்டும் அல்லது ஒன்றைவிட்ட ஒரு இருக்கை வெறுமையாக இருத்தல் வேண்டும்.

பார்வையாளர் நிழ்ச்சிகளில், நிகழ்வைப் பார்த்துக்கொண்டு உணவுண்ணல் ஆகாது.

நிகழ்விற்கு இடைவேளை அறிவிப்பது தவிர்க்கப்படவேண்டும்.

பிறநிகழ்வுகள்

ஆகக்கூடியது 15 ஆட்கள் பங்கெடுக்கும் நிகழ்வுகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்படுகின்றது.

இவை அருங்காட்சியம் அல்லது மன்றத்தின் ஒன்றுகூடல் அல்லது பிற ஏனைய பொழுதுபோக்கு அல்லது ஓய்வு நிகழ்வுகளாக இருக்கலாம்.

விளையாட்டும் பாண்பாட்டு நிகழ்வும்

குழுக்களாகப் பங்கெடுக்கும் செயற்பாடுகளில் ஆகக்கூடியது 15ஆட்கள் மீண்டும் பங்கெடுத்துக் கொள்ளலாம்.

ஒருவருக்கொருவர் போதிய இடைவெளி (1.5மீற்ரர்) கடைப்பிடிக்க வேண்டும்.

வெளியரங்கிலும் அதுபோல் உள்ளரங்கிலும் முகவுறை அணிதல் கட்டாயம் ஆகும்.

தாங்காற்றல் உடற்பயிற்சி மேற்கொள்வோருக்கும் அதுபோல் குழுவாக பாடற்பயிற்சி செய்வோருக்கும் கட்டாய முகவுறை அணிய வேண்டும் எனும் விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

ஒருவரை ஒருவர் தொட்டுத்தீண்டி உள்ளரங்கில் மேற்கொள்ளப்படும் விளையாட்டுப் பயிற்சிகள் மேற்கொள்வதற்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொர்ந்தும் நீடிக்கின்றது.

வெளியரங்கில் முகவுறை அணிந்து விiயாட்டுப் பயிற்சி மேற்கொள்ளலாம்.

ஆனால் போட்டிகள் நடாத்த தொடர்ந்தும் தடை நீடிக்கின்றது.

கட்டாய முகவுறை அணிதலில் தளர்வு

தடுப்பூசி இட்டுக்கொண்டு மூதாளர் மற்றும் பராமரிப்பு இல்லத்தில் வாழ்பவர்களுக்கு கட்டாய முகவுறை அணியும் விதியில் இருந்து தளர்வு அறிவிக்கப்படுகின்றது.

குறைந்தது 80வீதப் பணியாளர்களை கிழமைக்கு ஒருமுறையேனும் மகுட நுண்ணித் தொற்றுப்பரிசோதனை மேற்கொள்ளும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு, நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவருடன் சந்திப்பு நேர்ந்தால் தம்மை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்ற விதியில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகின்றது.

மகுடநுண்ணித் தொற்றிற்கு ஆளானவருடன் தொடர்பிருந்தால் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் விதியிலிருந்து தடுப்பூசி இட்டுக்கொண்வருக்கு விலக்கு அளிக்கப்படுகின்றது.

வகுப்பறையில் நேரில் பாடம்

கட்டாயப் பாடசாலை கடந்து மேற்கல்வி புகட்டும் பாடசாலைகளிலும், பல்கலைக்கழகத்திலும் வரைமுறைகளுடன் நேரடி வகுப்பு நடைபெற அனுமதி அளிக்கப்படுகின்றது. ஆகக்கூடியது 15 ஆட்கள் வகுப்பில் பங்கெடுக்கலாம். அறையின் கொள்ளளவு மும்மடங்காக அமைய வேண்டும். முகவுறை அணிதல் கட்டாயம் ஆகும். அதுபோல் உரிய இடைவெளியும் பேணப்பட வேண்டும்.

தேர்வு

சுவிற்சர்லாந்து நாடுதழுவிய மற்றும் மாநில அரசின் விதிப்படி நடைபெறும் அனைத்து கற்கை முதிர்ச்சித் தேர்வுகளும் 2021ல் வழமைபோல் நடைபெறும். வழமையான ஒழுங்கு முறமையில் தேர்வுகளை நடாத்த வாய்புக் கூடவில்லையானால் விதிவிலக்குகள் அவசரகாலச்சூழலிற்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்.

நன்றி

தொகுப்பு: சிவமகிழி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment